எழுந்த‌து மானுடம்

எழுந்த‌து மானுடம்!(Edit)

இன்றைய கவலைக்கென‌

விழித்து விட்டது மானுடம்

அழகிய விடிய‌ல்

கதிரவன் தூரிகை

மேகச் சித்திரம்

பாடும் பறவைகள்

சிரிக்கும் மலர்கள்

வேர்க‌ள் மண்ணில் சிக்கினும்

வான் நோக்கிக் கரம் நீட்டும்

நெடிய மரங்கள்

புல்லின் இதழ்களில்

பூத்த பனித்துளி

எதுவும் காணாது எழுந்ததும் திறம்பி

இன்றைய கவலைக்கென‌

எழுந்த‌து மானுடம்!

13 March 2016


Powered by LionWiki. Last changed: 2016/03/13 00:40 Erase cookies Edit History