KaaniPlan

ஒரு காணி நிலத்திற்கான திட்டம்(Edit)

ஒரு காணி என்பது 1.33 ஏக்கர் அல்லது 58000 சதுர அடி கொண்ட பரப்பளவு

ஆகும் . காணி நாயகர்கள் எவ்வாறு ஒரு காணி நிலத்தில் பொருள் ஈட்டுவது

என்பதே நம் குறிக்கோள். ஒரு காணி நிலத்தை திட்டமிடும் பொழுது, அது ஒரு

உயிர்ச்சூழல் பண்ணையாக, தன் உரத் தேவைகளைத் தானே சமாளித்துக் கொள்வதாய் ,

இடு பொருள் மற்றும் வேலை ஆட்கள் தேவை குறைந்ததாய், நிலைத்த பொருளாதாரம்

கொண்டதாய் திட்டமிடல் வேண்டும். சுருக்கமாய் சொன்னால் தற்சார்பு

உடையதாய் இருக்க வேண்டும்.

மாதிரித் திட்டம்:

(1) வீடும் பிறவும்: 8000 சதுர அடி (18 சென்ட்)

இதில் வீடு, மாட்டுக் கொட்டகை, பம்பு செட், வாகனம்

நிறுத்துமிடம்,மண்புழு எருக் கொட்டகை, கோழி/ஆடு கட்டுமிடம் எல்லாம் அடங்கும்.

(2) உணவு தானியங்கள்/பயறு/ எண்ணை வித்துக்கள் உற்பத்தி (சுய தேவைக்காக)

- 12500 சதுர அடி (29 சென்ட்)

(3) நீன்ட கால மரங்களும் அவற்றின் இடையில் தீவனப் புற்களும்(கால்

நடைகளுக்காக)- 12500 சதுர அடி (29 சென்ட்)

(4) வாழை, பப்பாளி மற்றும் பிற பழ மரங்கள் 7500 சதுர அடி (17 சென்ட்)

(5)காய்கறிகள்- பல்வகை - 17500 சதுர அடி (40 சென்ட்)

இது தவிர‌ சுய நுகர்ச்சிக்காக , கோழி , ஆடு, தென்னை மரம், தேனி போன்றவை

வளர்க்க வேண்டும்.

29 சென்ட் இடத்தில், நெல், பருப்புகள், நிலக்கடலை/எள் போன்றவை வீட்டுத்

தேவைக்காக வளர்க்கலாம். வருடம் 7-8000 ரூபாய் மட்டுமே இதற்காக செலவு

ஆகும்.

29 சென்ட் தீவனப் புல் மற்றும் பிற தாவரக் கழிவுகள் 2 கறவை

மாடுகளுக்குப் போதுமானது.

சுமார் 2000 லி பால் கிடைக்கும் - இதில் வீட்டு உபயோகம் போக (2 லி தினம்)

- 1300 லி மிச்சமாகும். லி 18 ரூ என்று விற்றால் 23500 ரூ வருட வருமானம்

கிட்டும்.

பாலை விட மாட்டின் சாணியும் மூத்திரமும் விலை உயர்ந்தது - (உரம் ஆகும்

பொழுது.)

பழங்களில் வருமானம் - சதுர அடிக்கு வருடம் 7.0 ரூ = 7500 x 7.0

=52500

காய்கறிகளில் வருமானம் - சதுர அடிக்கு வருடம் 8.2 ரூ =

17500 x 8.2 = 143500

பால் 1300 x 18 = 23500

வருட வருமானம் 220,000

உத்தேச செலவுகள் (கூலி மட்டுமே

செலவு) 40,000

நிகர வருமானம் 180,000

சதுர அடி வருமானக் கணக்கு

காய்கறிகள் - ஒரு ஹெச்டேருக்கு சராசரியாக - 30,000 கிலோ - ஒரு பயிரில்.

ஒரு சதுர அடிக்கு 280 கிராம். மூன்று போகம் பயிர் செய்தால் ஒரு சதுர

அடியில் 840 கிராம் காய்கறிகலள் எடுக்கலாம் . ஒரு கிலோ பத்து ரூ என்று

விற்பனை செய்தால் 8.4 ரூ சதுர அடிக்கு கிடைக்கும். பத்து ஏக்கர்

தானியங்களைப் போடுவதை விட 10000 சதுர அடி காய்கறிகள் அக்கறையாய்ப் பயிர்

செய்தால் நல்ல வருமானம் பெறலாம். 17500 சதுர அடி என்பது 40 சென்ட் இடம்

தான் - நீர் கட்டுவது, உரம் தயரிப்பது, பயிர் பாதுகாப்பு எல்லாம் ஓரிருவரே

செய்ய முடியும். முக்கிய வேலை இருக்கும் போது வேலை ஆள் அமர்த்திக்

கொள்ளலாம்.

பழங்க‌ள் - ஒரு ஹெக்டேருக்கு 40,000 கிலோ - இதே கணக்கில் ஒரு கிலோ 20 ரூ

விற்றால், ஒரு சதுர அடி ரூ 7 ஈட்ட இயலும்.

விற்பனை உத்திகள்:

காணி நாயகர்களுக்கு சுய விற்பனை என்பது தற்சார்பின் மிக முக்கியமான ஒரு

அங்க‌மாகும். நடைமுறையில் பார்க்கும் பொழுது , நம் கணக்கில் 300

நாட்களுக்கு சுமார் 50 கிலோ தினப்படி காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டி

வரும். ஒரு இருபது வகைக் காய்களை உற்பத்தி செய்தால் விற்பனை மிக எளிது.

எளிமையாகச் செய்வதானால், 2 கடைகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகைக்கு 5-6

கிலோ கொடுத்துக் காசு பெற்றுக் கொள்ளலாம். அல்லது வாரம் ஒரு முறை இயற்கை

அங்காடி நாமே அமைக்க முயற்சி செய்யலாம்.

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகள் மிகவும் சுவை உள்ளதாய்

இருப்பதாலும், அவை நஞ்சு அற்றவை என்று பரவலான விழிப்புணர்வு இருப்பதாலும்,

மேலும் நம் விலை வருடம் முழுவதும் ஒரே போல் இருப்பதாலும் - இவற்றை விற்பது

மிக எளிது.

நாம் சற்றுக் கூச்சத்தை விட்டு தராசு பிடிக்கத் துணிய வேண்டும்!

அருகிலுள்ள நகரம்/ ஊராட்சியில் உள்ள நுகர்வோரை அணுகி, அவர்களை 20-30

பேராகத் திரட்டி அவர்களுக்குத் தேவையானவற்றை வாரம் ஒரு முறை, மாதம் ஒரு

முறை என்று கொன்டு தர வேண்டும். இந்த மெனக்கெடல் எல்லாம் முதல் ஒரு வருடம்

மட்டும் தான். நம் பொருள் தரமானதாக இருப்பதால் காணி நாயகர்கள் தமக்கென்று

ஒரு நிரந்தர சந்தையை உருவாக்குவது கடினமல்ல - ஆனால் மிக இன்றியமையாதது.

விடுதலை என்பது நம் கையில் உள்ளது - உழவன் விடுதலையே உலகின் விடுதலை!


Powered by LionWiki. Last changed: 2014/01/12 03:12 Erase cookies Edit History