SimpleTruth

This revision is from 2016/05/29 08:57. You can Restore it.

எளிய ஞானம்(Edit)

ஆன்ம தேடல் என்பது எல்லாத் தேடல்களின் இறுதிக் கட்டம்.பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது என்று பத்தாயிரத்தில்(லட்சத்தில் ?) ஒருவரே ஆன்ம தேடலில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் அறிந்து இருப்பது மானுடர்க்கு ஒரு மிகப்பெரும் நல்வாய்ப்பு. தமிழில் இருக்கும் மெய்ந்நூல்கள் எண்ணற்றவை. எனினும் தேடல் என்பது பெரும்பாலும் மத‌ச் சார்பு கொண்ட‌தோ அல்லது தனிநபர்த் துதியடங்கியதாகவோ இருக்கிறது. இதனால் குழப்பங்களும், பிரிவினைகளும், மதச் சண்டைகளுமாய் வழி தவறிப் போகும் வாய்ப்பு பெருமளவு இருக்கிறது. சாதிப் பிரிவினைகளும் மெய்த்தேடலைச் சில பிரிவின‌ருக்கென உரித்தாக்க முயல்கின்றன. இதை எதிர்க்கும் அறிவாளிகள் இதன் நேரெதிர் நிலைப்பாடான நாத்திகம் , பகுத்தறிவு போன்ற அறியாமைகளில் சிக்கிக் கொண்டு தங்கள் தேடலில் தேக்க நிலையை எய்தி விடுகிறார்கள்.


Powered by LionWiki. Last changed: 2016/05/29 03:27 Erase cookies Edit History