Main page Recent changes | Edit History | |
taotamil01 | ||
---|---|---|
பாடல் 1 விளக்கக் கூடிய வழி அழியா வழியல்ல; பெயரிடப் படக் கூடிய பெயர் அழியாப் பெயரல்ல. பெயரற்ற அதுவே வானுக்கும் மண்ணுக்கும் ஆதி; பெயருள்ளதோ எண்ணற்ற பொருட்களுக்குத் தாய் ஆகிறது. அங்ஙனே, என்றும் ஆசையற்று ஆதி உணரப்படுகிறது; சதா ஆசையுடன் அதன் வெளிப்பாடுகள் தெரியப் படுகின்றன இவை இரண்டும் ஒன்றாய்க் கிளம்பினும், பெயரில் வேறுபடுகின்றன இவ்வொருமையே அறியொணாததற்கெலாம் அறியொணாததாய், அனைத்து விந்தைகளுக்கும் வாயிலாய் இருக்கிறது.
|
||
Powered by LionWiki. Last changed: 2016/06/15 14:59 Erase cookies | Edit History |