taotamil02

பாடல் 2

உலகம் அழகை அழகென அறியும்போது அசிங்கம் பிறக்கிறது

அது நன்றை நன்றென அறியும்போது தீமை பிறக்கிறது

இங்ஙனமே, உள்ளதும் இல்லாததும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்கின்றன‌

கடினமும் எளிதும் ஒன்றால் ஒன்று உதிக்கின்றன‌

நீளமும் குட்டையும் ஒன்றை மற்றொன்று காட்டுகின்றன‌

மேலும் கீழும் ஒன்றை ஒன்று தாங்குகின்றன‌

இசையும் குரலும் ஒன்றை ஒன்று லயப்படுத்துகின்றன‌

முன்னும் பின்னும் ஒன்றை ஒன்று தொடர்கின்றன‌

எனவே ஞானிகள்:

பற்றற்ற செயல்களை நிர்வகிக்கின்றனர்

சொல்லற்ற போதத்தை நடத்துகின்றனர்

எண்ணற்ற பொருட்களுடன் இயங்கினும் அவர்கள் எதையும் அடக்குவதில்லை

அவர் உருவாக்குகின்றனர்; ஆனால் உடைமை கொள்வதில்லை

அவர் செயல்படுகின்றனர் ஆனால் எதையும் இருப்பதாய்க் கொள்வதில்லை

அவர்கள் வெல்கின்றனர் ஆனால் வெற்றியைப் பற்றிச் சிந்திப்பதில்லை

அவர்கள் வெற்றியைச் சட்டை செய்யாததால்

அது அவர்களை விட்டு அகலுவதே இல்லை!


Powered by LionWiki. Last changed: 2016/06/13 16:06 Erase cookies Edit History