taotamil03

சாதனையாளர்களைப் புகழாதீர்கள்

இதனால் மக்கள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்கள்

அடைவ‌தற்குக் கடினமான‌ பொருட்களை விலைமதிக்காதீர்கள்

இதனால் மக்கள் திருடர்கள் ஆக மாட்டார்கள்

இச்சைப் படும் பொருட்களைக் காட்டாதீர்கள்

இதனால் அவர் இதயங்கள் குழப்பம் அடையா

எனவே ஞானியின் மேலாண்மை:

அவர் இதயங்களைக் காலி செய்து

வயிற்றை நிரப்பி

அவர் அபிலாஷைகளை நலிவடைத்து

உடல் எலும்புகளை வலுவூட்டுகிறது

மக்கள் சூழ்ச்சியும் பேராசையும் இன்றி இருக்கட்டும்

இதனால் சூதுடையவர்கள் குறுக்கிட அஞ்சுவர்

திட்டமிடாமல் செயலாற்றுங்கள்

உங்கள் கட்டுப்பாட்டை எதுவும் மீறாது


Powered by LionWiki. Last changed: 2016/06/13 16:03 Erase cookies Edit History