taotamil05

பாடல் 5


வானும் மண்ணும் வேற்றுமை அறியாத‌வை

அவை எண்ணற்ற பொருட்களை வைக்கோல் நாய்களைப் போல் கருதுகின்றன‌

ஞானிகள் வேற்றுமை அறியாதவர்

அவர் மனிதர்களை வைக்கோல் நாய்களைப் போல் கருதுகின்றனர்

.

வானுக்கும் மண்ணுக்கும் இடையுள்ள வெளி

காற்றை வீசும் பெல்லோசைப் போலல்லவா இருக்கிறது?

காலியாயினும் தீர்வதே இல்லை

அசைய அசைய மேலும் உற்பத்தி செய்கிறது

.

அதிக வார்த்தைகள் தோல்வியை விரைவாக்கும்

வெளியுடன் இருப்பதற்கு எதுவும் இணையாகாது

.


வைக்கோல் நாய்கள் - straw dogs - வைக்கோல் கன்றுக்குட்டியைப் போல் சரக்கற்ற உருவம்

பெல்லோஸ் - ஆர்மோனியப் பெட்டியில் காற்று உருவாக்கும் பைபோன்ற கருவி

வெளி- சூனியம், void


Powered by LionWiki. Last changed: 2016/06/13 16:25 Erase cookies Edit History