taotamil06

பாடல் 6(Edit)


பள்ளத்தின் ஆவி அழிவற்றது

அது ஞானப் பெண்ணென்று அழைக்கப் படுகிறது

ஞானப் பெண்ணின் வாயில்

வானுக்கும் மண்ணுக்கும் ஆணிவேராய் இருக்கிறது

அது நிற்காமல் பாய்கின்றது; மிக, மிகத் துல்லியமாகவே உணரப் படுகிறது

அதைப் பயன்படுத்துங்கள்; அது தீர்வதே இல்லை


பள்ளத்தின் ஆவி - valley spirit (gu shen in Chinese , literally meaning valley spirit)

மாதா பிதா கூட இல்லாமலே வெளி பல்லே

மண்ணும் விண்ணும் உண்டு பண்ணவென்று

பேதைப் பெண்ணாமுதல் வாலைப் பெண்ணாளென்று

புகுந்தாளிந்தப் புவியடக்கம்

- கொங்கணவர் சித்தர்


Powered by LionWiki. Last changed: 2016/06/15 03:33 Erase cookies Edit History