taotamil08

பாடல் 8 (Edit)


மிக உயர்ந்த நன்மை நீரைப் போன்றது

மிகப்பல பொருட்களுக்கு நீர் பெரும் நன்மை செய்தும் அமைதியாய் இருக்கிறது

அது மக்கள் விரும்பாத பல இடங்களில் தங்குகிறது

எனவே அது வழியைப் போன்றது

சரியான இடத்தில் தங்குவது

பெரும் ஆழத்துடன் உணர்வ‌து

பெரும் கருணையுடன் வழங்குவது

பெரும் நேர்மையுடன் பேசுவது

பெரும் மேலாண்மையுடன் ஆள்வது

பெரும் திறமையுடன் கையாள்வது

சரியான நேரத்தில் நகர்வது

அது போட்டியிடுவதில்லை

அதனால் அது குறைகளைக் கடந்தது



Powered by LionWiki. Last changed: 2016/06/15 08:12 Erase cookies Edit History