taotamil09

பாடல் 9


ஒரு கோப்பை நிரம்பி வழிந்தும் ஊற்றிக் கொண்டிருப்பதை விட‌

பாதியிலேயே நிறுத்துவது நலம்

ஒரு கத்தியைத் தட்டித் தட்டித் தீட்டிக் கொண்டே

எப்போதும் இருக்க இயலாது

தங்கமும் வைரமும் அறையை நிரப்புகின்றன‌

யாராலும் அதைக் காக்க இயலவில்லை

செல்வமும் பதவியும் செருக்கை உருவாக்கி

நம்மேல் பேரிடர் விழச் செய்கின்றன‌

செயலில் வெற்றி பெற்றால் புகழ் அடையப் படுகிறது

உன்னை உள்ளே இழுத்துக் கொள்

இதுவே வானுலகுக்கு வழி



Powered by LionWiki. Last changed: 2016/06/15 08:20 Erase cookies Edit History