taotamil10

பாடல் 10


ஆன்மாவைப் பற்றி, ஏகாத்மத்தை அணைக்கையில்

அங்கிங்கு அசையாது திடமாய் இருக்க ஒருவனால் இயலுமா?

சக்தியைக் குவித்து, லேசான மனதை அடைவதில்

ஒருவன் குழந்தை போல் இருக்க இயலுமா?

உலகியல் பார்வையைத் துடைத்து எறியும்போது

ஒருவனால் குறைகளற்று இருக்க இயலுமா?

மக்களை நேசித்து நாட்டை ஆள்வதில்

ஒருவனால் சூழ்ச்சியின்றி இருக்க இயலுமா?

வானுலகின் கதவுகள் திறந்து மூடுகையில்

ஒருவனால் யின்னைப் பற்ற இயலுமா?

எல்லாப் போதங்களையும் தெளிவாய்ப் புரிந்து கொள்கையில்

ஒருவனால் தன் புத்தியைப் பயன்படுத்தாமல் இருக்க இயலுமா?

பெறுவதும் , வளர்ப்பதும்

உடைமை கொள்ளாமல் ஏற்பதும்

கர்வம் இன்றி வெல்வதும்

அடக்குமுறை இன்றித் தலைமை கொள்வதும்

இதுவே ஞான நன்மை எனப்படுகிறது


- ஏகாத்மம் - அனைத்தும் ஒன்றான ஒருமை ; "நீயலாற் பிறிது மற்றின்மை" - திருவாசகம்

- யின் - யின்/ யாங் என்பது பெண்/ஆண் தன்மைகள்; தமிழ்/வடமொழியில் இதனை இடம்/பிங்கலை என்பர்


Powered by LionWiki. Last changed: 2016/06/15 15:37 Erase cookies Edit History